AD

பிக்பாஸ் 3 இல் பங்கேற்க மறுத்த நடிகை !


பிக்பாஸ் 3 புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது.  அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலை தொடங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகேற்கும் வாய்ப்பு 'ஜோடி’ ஷோ மூலம் பிரபலமடைந்த 

ஆனந்திக்குக் கிடைத்தாக செய்தி பரவி வந்தது. இந்த நிலையில் அவர் இது குறித்து பிரபல ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில், 'எனக்கு ஒரு மகன் இருக்கிறான்...அவனுக்கு ஒன்றரை வயது தான் ஆகிறது. படப்பிடிப்புக்குக் கூட அனுமதி பெற்று அவரை அழைத்துச் செல்கிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி மகனை விட்டு விட்டு பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க முடியும். அதனால் தான் வந்த வாய்ப்பை மறுத்தேன்' என்று கூறியுள்ளார்.



#Bigboss3 #Bigbossseason3 #Tamilcinemaking