AD

வைரலாகும் நடிகை சுவலட்சுமியின் புகைப்படம்!!!

நடிகை சுவலட்சுமி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கோடி கட்டி பறந்தவர்களின் ஒருவர். அதனால் இவரை யாரும் கண்டிப்பாக மறக்க வாய்ப்பு இல்லை என்பது உண்மைதான். 1995ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "ஆசை" படத்தின்  யமுனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்தான்  நடிகை சுவலட்சுமி. முதல் படமே நடிகர் அஜீத்துடன் என்பதால் படம் சூப்பர் ஹிட்டானது. 
ஆசை திரைப்படத்திற்கு முன்பாகவே பெங்காலியில் வெளியான "ஓட்டுறான்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னரே தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர், பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்தார் . நடிகர் அஜித்தை அடுத்து நடிகர் விஜய்யுடன் "லவ் டுடே" படத்திலும் நடித்திருந்தார். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாமல் குடும்பங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்தார்.பின் பல நடிகைகளின் வரவால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால்  சீரியல் பக்கம் திரும்பினார்.
பின்னர் சன் தொலைகாட்சி ஒளிபரப்பான சூலம் தொடரிலும் நடித்தார். அதன் பின் திருமணம் செய்துகொண்டு கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பின்பு  இவருக்கு  பல பட வாய்ப்புகள் வந்தது., ஆனால் திருமணமான பின்னர் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக மறுத்து விட்டார்  சுவலட்சுமி. தற்போது தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கலிபோர்னியாவில் சந்தோசமாக வசித்து வருகிறார். தற்போது சுவலட்சுமி புகைபடம் ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகின்றது.
#suvalakshmi #aasai #ajith kumar #vijai #tamilcinemaking