AD

அஜித்துக்கும் சூர்யாவுக்கும் ஒருவர்தானா

அஜித்தை வைத்து படம் இயக்கிய ஒளிப்பதிவாளர் சிவா  தற்போது சூர்யாவின் 39 ஆவது, படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

தற்போது என்ஜிகே., காப்பான் படங்களை முடித்துவிட்ட சூர்யா,  "சூரரைப் போற்று" படத்தில் நடிக்கிறார். இதை முடித்ததும் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக இருந்த சிவா, கார்த்தி நடித்த "சிறுத்தை" படம் மூலம் இயக்குநராக மாறினார். அதனைத் தொடர்ந்து  அஜித்தை வைத்து, "வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்" என நான்கு படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


#Ajith-Kumar, #Suriya, #tamilcinemaking