AD

எம்.பி. தேர்தலில் போட்டியிடும் "பிக் பாஸ்" பிரபலம்...!!!!

 "பிக் பாஸ்" புகழ் தாடி பாலாஜியும்  அவரது மனைவி நித்யாவும் சமீபத்தில் அதிகம் அடித்துக்கொண்ட கணவன் மனைவி பட்டியலில் முதல்  இடம் பிடித்தவர்கள் எனலாம். ஒருவரை ஒருவர் அவதூறு செய்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்ததும், கமிஷனர் அலுவலகம் சென்று புகார் கொடுப்பதுமாக இவர்களது சண்டை நீண்டு கொண்டே போனது.

இந்நிலையில் நித்யா சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட "தேசிய பெண்கள் கட்சி"யில் இணைந்துள்ளார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கவும் பட்டுள்ளார். அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட இருக்கிறார். இது குறித்து நித்யா கூறியிருப்பது:-
முதலில் நான் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடதான் முடிவு செய்து இருந்தேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கு வந்து என்னை பற்றி அவதூறு பரப்ப பாலாஜி திட்டமிட்டு இருந்தார், அதுவும் இல்லாமல் டெல்லியில் எங்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளுக்கே போன் செய்து 'அவள் எல்லாம் கட்சித் தலைவியா" என்று கேட்டு பிரச்சினை செய்து இருக்கிறார். இவர் சொன்ன எதையும் கவனத்தில் எடுத்து கொள்ளாத எங்கள் கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில் போட்டியிட கூறியுள்ளார்கள்.

வடக்கு டெல்லியில் தமிழர்கள் இருப்பது எனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. அதனால் சரி என்று சொல்லி விட்டேன். அடுத்த சில நாள்களில் நான் டெல்லி போய் தேர்தல் வேலைகளை தொடங்கவேண்டும் என்கிறார் நித்யா.

#bigboss #nithya #thadibalaji #vijaytv #northdelhi #tamilcinemaking