AD

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு - பேரன் ஐக் விளக்கம்..!!!

"சங்கிலி புங்கிலி கதவ தொற" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் "ஐக்". இவர் M.R.ராதாவின் பேரன் ஆவார். தனது இரண்டாவது படத்தை தனது தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க உள்ளார்.

இதற்காக இவர் தன் தாத்தாவின் பற்றிய புத்தகங்களையும், செய்திகளையும் படித்து, அதை திரைக்கதையாக வடிவமைத்தும்  வருகிறார். மேலும் M.R.ராதாவாகவும், M.G.R ஆகவும் நடிக்க நடிகர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று இணையதளத்தில் ஒரு செய்தி வெளியானது "M.R.ராதா, M.G.R" வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க உள்ளார் இயக்குனர் "ஐக்". இதில் "M.G.R ஆக அர்விந்த்சாமியும், M.R.ராதாவாக சிம்புவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி ஆகும்.

இச்செய்தி உண்மையில்லை என்று இயக்குனர் "ஐக்" தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#MGR #MRRadha #Simbu #AravindSwami #Ike #Tamilcinemaking