AD

வாக்கு அளித்ததாக நாடகமாடிய பிரபல நடிகர்...!!!

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியதால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் சத்ய சாஹூ. நடிகர் ஸ்ரீகாந்த் விவகாரத்திலும் குழப்பம் இருந்து வந்த நிலையில் அவர் ஆசைப்பட்டதால் அவர் விரலுக்கு மை மட்டுமே வைக்கப்பட்டது. ஆனால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என ஒரு புதிய தகவல் வந்துள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த்திடம் கைவசம் படங்கள் அவ்வளவாக இல்லாத நிலையில்  டைம் பாஸ் பண்ணிவரும் ஸ்ரீகாந்த், தேர்தல் தினத்தன்று,  தனது ட்விட்டர் பக்கத்தில்...இன்று காலை சாலிகிராமம் காவேரி பள்ளியில் வாக்களித்தோம்’ என்று தனது மனைவியுடன் ஒற்றை விரலை உயர்த்தி போஸ் கொடுத்திருக்கிறார். நடிகர் ஸ்ரீகாந்த் வாக்கு அளிக்கவில்லை என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவில் கூறியுள்ளார்.

#srikanth #sivakarthikeyan #tamilcinemaking  #voting #tamilnadu #elections2019