AD

ஆமாம், நான் அயோக்யன் தான் - விஷால்

"ஒரு பொண்ணை பார்த்தவுடனேயே அவரை தூக்கிட்டுப்போய் ரேப் பண்ணும் தைரியம் எங்களுக்கு இருக்கு"


விஷாலின் அயோக்யா பட ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. விஷால் இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதுடன் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். மற்றும் பார்த்தீபன் வில்லனாக நடித்திருக்கிறார். இப் படம் மே மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந் நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ஆண்டவன் படைச்சான், என்கிட்ட கொடுத்தான் என்று விஷால் பாடுவதுடன் ட்ரெய்லர்  துவங்கி ஆமாம், நான் அயோக்யன்தான் என்று விஷால் கூறுவதுடன் முடிகின்றது இப் படத்தின் ட்ரெய்லர்.

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக்கே இந்த அயோக்யா. புதுமுகம் வெங்கட் மோகன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


#Vishal #Ayogya #Ayogyatrailer #Tamilcinemaking