AD

அவமானப்படுத்தியவருக்கு பதிலடி கொடுத்த அனிருத்

'வை திஸ் கொலவெறி' என்ற பாடல் ஊடாக உலகத்தையே கவர்ந்தவர் அனிருத். பின்னர் அவரது இசையமைப்பில் வெளிவந்த சில பாடல்கள் யூ டியுபில் 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 

தெலுங்கில் கடந்த ஆண்டு திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. ஆனால், அந்தப் படம் படுதோல்வி அடைந்தது.  படத்தின் தோல்விக்கு அனிருத்தின் இசைதான் காரணம் என்று படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் கூறியுள்ளார்.

அவருக்கு தெலுங்கு திரையிசை புரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், விமர்சகர்கள் பலரும் அனிருத்தை விமர்சித்தனர்.

இதனிடையே, அனிருத்தின் இரண்டாவது தெலுங்குப் படமான நானி நடித்த 'ஜெர்ஸி' படம் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.  

அது குறித்து அனிருத், 'இன்ஸ்டாகிராமில்', ரஜினியின் 'பேட்ட' படத்தின் தெலுங்கு வசனமான 'நா பணி ஆயிப்போயிந்தி அனுகுன்டுன்னாரா' என்ற வசன வீடியோவுடன் ஜெர்சியை ரசித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அதாவது, ”என் வேலை அதுக்குள்ள முடிஞ்சிடுச்சின்னு நினைச்சீட்டிங்களா” என்பதே அதன் அர்த்தம்.

இதன் மூலம் தன்னை அவமானப்படுத்ய 'அஞ்ஞாதவாசி' இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் மற்றும் சில விமர்சகர்களுக்கு அனிருத் சரியான பதிலடி கொடுத்துவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் நினைக்கின்றனவாம். 


#anirudh, #tamilcinemaking