AD

மே - 1 இல் இத்தனை படங்களா

கோடை விடுமுறையை முன்னிட்டு  தங்கள் திரைப்படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். திரையுலகில் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் முன்னணி நாயகர்களின் படங்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை. 

பெரிய படங்களோடு போட்டிபோட முடியாத தயாரிப்பாளர்கள் இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் படங்களை வெளியிடுவர். இதனால், மே மாதம் மீண்டும் முன்னணி நாயகர்கள் படங்கள் அணிவகுக்கும்.

மே 1 ஆம் திகதியை மையமாகக் கொண்டு நேர்கொண்ட பார்வை மற்றும்  மிஸ்டர்.லோக்கல் திரைப்படங்கள் வெளியாகவிருந்தது.

எனினும் படத்தின் பணிகள் நிறைவடையாமை, போதிய திரையரங்குகள் கிடைப்பதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக வெளியாகும் திகதிகள் தள்ளி வைக்கப்பட்டன.

மதுரையை பின்புலமாகக் கொண்டு உருவாகியுள்ள தேவராட்டம் திரைப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வராமல் இருந்தன. தற்போது இதுவும் மே 1ஆம் திகதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்துள்ள படம் கே-13. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் 

பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே-13 திரைப்படமும்  மே1 ஆம் திகதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது. இந்தப் பட்டியலில் இணையும் மற்ற படங்களின் விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.



 #Ajith_Kumar, #Sivakarthikeyan, #Nayanthara, #Arulnithi, #tamilcinemaking