AD

தெலுங்கு நடிகையுடன் கைகோர்க்கும் ஜீ வி பிரகாஷ்!!

ஜீ வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து தற்பொழுது திரையில் ஓடி கொண்டிருக்கும் படம்தான் குப்பத்து ராஜா. அதன் பிறகு இயக்குனர் எழில் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் எழில் ஏற்கனேவே "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்", "சரவணன் இருக்க பயமேன்", "ஜகஜ்ஜால கில்லாடி" என பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நாயகனாக ஜீ வி பிரகாஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் "ஓயீ" என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனிடையே ஜீ வி பிரகாஷ் நடிப்பில் வாட்ச்மேன் படம் விரைவில் வெளியாகவிருப்பதும், அதனைத் தொடர்ந்து 100% காதல், காதலிக்க யாருமில்லை, காதலைத் தேடி நித்தியா நந்தா,  சிவப்பு மஞ்சள் பச்சை, அடங்காதே, ஐங்கரன் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#G.V Prakash #Isha Reba #Tamilcinemaking #Kollywood #Tamilcinemanews #Latest Update