AD

கர்பமாக இருக்கும் சமீரா நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்


நடிகை சமீரா ரெட்டி, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் உண்டு. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று இரு மொழிகளிலும் நடித்த நடிகை.

2014 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டுவிட்டார். அவருக்கு ஹான்ஸ் என்ற மகனும் இருக்கிறார். இந்த நிலையில் அவர் இரண்டாவது குழந்தைக்கு தாயாகும் செய்தியை அண்மையில் தான் தெரிவித்தார். தற்போது 4 மாதங்கள் முடிந்த நிலையில், அவர் ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

நீச்சல் உடையில் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரிடம் மகிழ்ச்சியாக பேசி வருகிறார்கள். இந்த புகைப்படம் பற்றிய உங்கள் கருத்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.