AD

நடிகை ராஷ்மிகாவுடன் விஜய் காதலா?

அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து டோலிவுட்டில் ஸ்டாராகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தபோது அப்பட ஹீரோயின் ராஷ்மிகாவுடன் காதல் என கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் மிஸ்டர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கிரார். இதிலும் அவருக்கு பிடித்த ராஷ்மிகாதான் ஹீரோயின். விஜய் தேவரகொண்டாவின் சிபாரிசால் ராஷ்மிகா நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தில் லிப் டு லிப் முத்தக்காட்சியில் இருவரும் மிகவும் நெருக்கம் காட்டி நடித்துள்ளனர். இந்த காட்சி டீஸரிலும் இடம்பெறுகிறது. இருவருக்கும் இடையிலான காதல் உண்மைதான் என்றும் பேச்சு எழுந்துள்ள இந்நிலையில், இருவரைப் பற்றி வரும் கிசு கிசுக்களை இவர்கள் இருவருமே மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ராஷ்மிகா தமிழில் நடிகர்  கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

#Vijay Thevarakonda #Rashmika #LoveStory