AD

தமிழ் ரீமேக்கில் த்ரிஷா!




பிங்க் படத்தை தொடர்ந்து அமிதாப்பச்சன் - டாப்சி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பட்லா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித்குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர். 

எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வருகிறார். இந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற இன்னொரு படமான ‘பட்லா’வும் தமிழில் ரீமேக் ஆகிறது. 

இந்த படத்திலும் அமிதாப்பச்சன், டாப்சி இணைந்து நடித்துள்ளனர். ரூ.10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.


இந்த படத்தின் தமிழ் பதிப்பில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் டாப்சி வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. திரிஷா நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த 96 படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. 

இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. மேலும் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். இப்போது கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு ஆகிய 4 படங்கள் திரிஷா கைவசம் உள்ளன.


#AmitabhBachchan #Taapsee #Trisha