AD

தமிழில் தலை காட்டும் வேதிகா

பரதேசி, காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தும் இன்னும் க்ளிக் ஆகாமலே இருப்பவர் நடிகை வேதிகா. 

பரதேசி படத்திற்கு பின்னர் அவருக்குப் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.  தனக்கு முனி படத்தில் வாய்ப்புக் கொடுத்த ராகவா லாரன்ஸிடம் மீண்டும் வாய்ப்புக் கேட்டார் வேதிகா.

'முனி 4, அதாவது காஞ்சனா 3' படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் ராகவா லாரன்ஸ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் அவர் இயக்கிய இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

காஞ்சனா 3' படத்தை தொடர்ந்து உருவாகும் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வேதிகா. இந்த படத்தில் வேதிகாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி  ஆரம்பிக்கவிருக்கிறதாம்.




#Vedhika, #Kaaviya_Thalaivan, #Kanchana,  #Raghava_Lawrence