AD

எனை நோக்கி பாயும் தோட்டா விரைவில் வெளியீடு!!





கெளதம் மேனன் - தனுஷ் கூட்டணி மற்றும் பாடல்களால் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் மதன் கூறியுள்ளார். 

அவர் மேலும், ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

டிரெய்லர் தயார். பட வெளியீட்டுக்கு வேலைகள் செய்து வருகிறோம். எல்லாம் நன்றாக நடந்தால் ஏப்ரலில் படம் வெளியாகலாம் என்று கூறியுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம்  தான் எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. 

இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. தணிக்கையில் இந்தப் படம் யு/ஏ பெற்றுள்ளது.
#Dhanush #Twitter #Publish