AD

`பொட்டு' படத்தின் முன்னோட்டம்

பரத் கதாநாயகனாகவும்  மற்றும் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி பின்னணியில் படு பயங்கரமான ஹாரர் படமாக இது உருவாகியுள்ளது. பரத்தின் படங்களிலேயே  இந்த படம் தான் முதன் முறையாக 1000 தியேட்டர்களில் ரிலீஸாகின்றது. அதுவும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது.

தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வசனம் - செந்தில், ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ், இசை - அம்ரீஷ், பாடல்கள் - விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத், ஸ்டன்ட்   - சூப்பர் சுப்பராயன், படத்தொகுப்பு - எலீசா, கலை - நித்யானந், நடனம் - ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், கதை, திரைக்கதை, இயக்கம் - வடிவுடையான்.



#Pottu #Bharath #Namitha #Iniya #SrustiDange