AD

இரண்டாம் பாகத்தில் சேதுபதி

தமிழ் சினிமாவில்  இரண்டாம் பாகம் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. ரஜினி, கமல், சூர்யா என பல நடிகர்களும் இரண்டாம் பாக படங்களில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி, விக்ரம்வேதா, 96 என பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

இவற்றில் எந்த படங்களின் இரண்டாம் பாகமும் உருவாகவில்லை.

இந்த நிலையில், முதன்முறையாக  இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. 

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, முதன்முறையாக பொலிஸாக நடித்து வெற்றிப் பெற்ற படம் சேதுபதி. 

இதன் இரண்டாம் பாகம் தற்போது  உருவாக இருக்கிறது. இதில் அருண் குமார், விஜய் சேதுபதியே மீண்டும் இணைகிறார்கள். 

முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, இன்னும் அதிரடியான பொலிஸாக நடிக்கவிருக்கிறாராம்.