AD

எல்லோரும் பெருமிதம் பட வேண்டிய நாள் இது ஓவியா!!


நடிகை ஓவியா  தனது சமூக வலைத்தளத்தில் இன்று ஒவ்வொரு இந்தியனும் பெருமிப்பட வேண்டிய நாள் என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டை முழுமையாக படிக்காத ஒருசில ரசிகர்கள் இன்று ஓவியாவின் ''90ml' திரைப்படம் ரிலீசைத்தானே அதைதான் அவர் பெருமையாக கூறுவதாக அவசரப்பட்டு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் ஓவியா தனது டுவிட்டில் கூறியது இதுதான்: 'இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய நாள். விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமான் இந்தியா திரும்பும் நாள். அவர் விடுதலையான இந்த நாளை பொதுமக்கள் திருவிழா போல் கொண்டாடி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அபிநந்தனின் வீரத்திற்கு ஒரு சல்யூட். அவருக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் கடவுளின் ஆசி எப்போதும் இருக்கும். ஜெய்ஹிந்த்! என்று பதிவு செய்துள்ளார்.


#Oviya #IndianAirForce #Indian Army #90ml