AD

யார் பெஸ்ட் சிம்புவா- தனுஷா மனம் திறக்கும் சோனியா அகர்வால்!!

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள "தடம்" திரைப்படத்தின் மூலம்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு  ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சோனியா அகர்வால் . இப்படம் இன்று மார்ச்.1ம் தேதி வெளியாகி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சமூக வளைதளத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த நடிகை சோனியா அகர்வால் தன்னுடன் பணியாற்றிய ஹீரோக்கள் சிம்பு, தனுஷ், விஜய் ஆகியோர் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும், இயக்குநர் செல்வாராகவனிடம் நடிப்புக் கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

நடிகர் சிம்பு மற்றும் தனுஷுடன் பணியாற்றியது குறித்து பேசிய சோனியா அகர்வால், இரண்டு பேரும் ஷூட்டிங் சமயத்தில் உதவியாக இருந்ததாகவும், குடும்பமாக மாறியதால் தனுஷுடன் இருப்பது கம்ஃபர்டபுளாக இருந்தது. அதேபோல் நடிகர் சிம்புவும், ஒரு பெரிய நடிகரின் மகன் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல் நன்றாக பழகினார்.

மேலும், தனது முதல் ஆசானான, இயக்குநர் செல்வராகவன் குறித்து கூறுகையில் , அவரிடம் தான் நான் நடிப்புக் கற்றுக் கொண்டேன். மொழியே தெரியாத போதும் "7ஜி ரெயின்போ காலனி" படத்தில் என்ன நடிப்பு  தேவையோ அதை என்னிடம் இருந்து வர வைத்தார். நிறைய டேக்குகள் எடுத்தால் கோபப்படுவார், சரியான கண்டிப்பான ஆசான் அவர் எனவும் கூறியுள்ளார்.


#SoniaAgarwal #Simbu #Dhanush #Selvaraghavan #7G Rainbow Colony