AD

கார்த்தியால் கடுப்பான பாண்டிராஜ்

சிவகார்த்திகேயனின் 16 ஆவது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் சில தினங்களுக்கு முன் வெளியாகியது. 

இயக்குநர் பாண்டிராஜும், சிவகார்த்திகேயனும் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.

கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் கார்த்தி. 

பாண்டிராஜை விரும்பாத எஸ்.ஆர். பிரபு இடையில் புகுந்து பாலிடிக்ஸ் செய்ய, பாண்டிராஜுக்கு கொடுத்த கால்ஷீட்டை 2020 க்கு தள்ளி வைத்திருக்கிறார் கார்த்தி. 

2020 வரை பாண்டிராஜை காத்திருக்கும்படியும் சொல்லி இருக்கிறார் கார்த்தி.

அதனால் கடுப்பான பாண்டிராஜ் கார்த்திக்கு சொன்ன அதே கதையை சிவகார்த்திகேயனிடம் சொல்லி ஓகே பண்ணி சன் பிக்சர்ஸுக்கு கமிட்டாகிவிட்டார்.