AD

நடிகை குஷ்பூவை நேரில் அழைத்த ஆர்யா!!

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.  மார்ச் 10-ல் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆர்யா - சாயிஷா திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகர் ஆர்யா தனது நெருங்கிய நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகை குஷ்பூவிற்கு நேரில் சென்று அழைத்திருக்கிறார். இதுகுறித்த தகவலை நடிகை குஷ்பூ அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

#Arya #Sayyeshaa #AryawedsSayyeshaa #Vishal #marriage #Kushboo