ரஜினியின் இளமை ரகசியம் இதுதான்!
தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதால் தான் இளமையாக உணர்வாக ரஜினி கூறியதாக அவரை நேரில் சந்தித்த சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் கூறியுள்ளார்.
ரஜினியுடனான சந்திப்பு குறித்து அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
அப்பாடா! வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளது. தலைவருடன் 15 நிமிடங்கள் இருந்தேன். 15 நிமிடங்களும் நேர்மறை உணர்வுகள்தான். கோயிலில் இருந்துவிட்டு வெளியே வந்ததைப் போல உணர்கிறேன். அவர் சூப்பர் ஸ்டாரை விடவும் மேலானவர்.
திரையில் தலைவரைப் பார்ப்பதுபோலத்தான் நேரிலும் உள்ளார். பேட்ட படத்தில் வருகிற மாணவர்களில் ஒருவனாகவே என்னை உணர்ந்தேன் - என் முன்னால் அவர் காளியாக, கடவுள் போல அமர்ந்திருந்தபோது. அவ்வளவு சுறுசுறுப்பு. அவருக்குள் நகைச்சுவை உணர்வு அதிகமாக உள்ளது. அவ்வப்போது அவருடைய வழக்கமான ஹா... ஹா... ஹா... சிரிப்பு!
சார், பேட்ட படத்தில் என்ன ஸ்டைல், என்ன எனர்ஜி, ஹேர்ஸ்டைல்... ப்பா... என்றேன். அப்படியா, எல்லாப் பாராட்டுகளும் கார்த்திக் சுப்புராஜுக்குச் சென்று சேரவேண்டும் என்றார். சார், எங்களுக்கு பேட்ட ரஜினி தான் எப்பவும் வேண்டும் என்றேன். பண்ணிடுவோம், பண்ணிடுவோம் என்றார்.
உங்களுக்குத் தெரியுமா, அவர் ஒரு யோகா மனிதர். அவருடைய இளமையின் ரகசியம் கேட்டு ஆச்சர்யம் அடைந்தேன். அவர் தினமும் நீச்சல் பயிற்சி செய்கிறார். முக்கியமாக, படப்பிடிப்புக்கு முன்பு. தினமும் உடற்பயிற்சி, யோகா, சத்துள்ள உணவுகள் உங்களை நல்லவிதமாகவும் இளமையாகவும் உணரவைக்கும் என்றார் எனத் தன் அனுபவங்களை எழுதியுள்ளார்.
#TamilCinemaKing #Rajani #Cinema TamilCinemaKing
Post a Comment