AD

நடிகை தமன்னா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!!!

 கண்ணே கலைமானே படம் வரையிலும் ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார், நடிகை தமன்னா. ‘தேவி-2’ படத்திலிருந்து சம்பளத்தை ரூ.2 கோடியாக மாற்றியிருக்கிறாராம்.

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான தமன்னா நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார். அதில் இவருக்குச் சம்பளம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ராஜ்மஹால்’ ஜவுளி விளம்பரத்தில் முதன்முதலில் நடித்தபோது, தமன்னாவுக்கு 14 வயது. அதில் இவருக்கு ஜோடியாக சாயா சிங்கின் கணவர் கிருஷ்ணா நடித்திருந்தார்.
நடிகைகள் அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகிய மூவரிடமும் நெருங்கிப் பழகுகிறார், தமன்னா. இவர் சினிமாவுக்கு வந்தபோது, தனியாக காஸ்ட்யூம் டிசைனர் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இவருக்குத் தெரியாதாம். அதை அவருக்குச் சொல்லிக்கொடுத்தவர், அனுஷ்கா.

யோகா, நடனம் இரண்டிலும் அதிக நாட்டம் கொண்டவர், தமன்னா. தினமும் காலையில் யோகா செய்வதும், மாலையில் நடனம் ஆடுவதும்தான் இவரது அழகின் ரகசியம்.

#Tamannaah #kanne #kalaimaane #KajalAggarwal #samantha #AnushkaShetty #TamilCinemaKing