AD

கலைமாமணி விருது பெறும் விஜய்சேதுபதி - பிரியாமணி

கடந்த ஆறு ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தன. தற்போது 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறப்படும் கலைஞர்கள் பட்டியலை தமிழ அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு நடிகர்கள்  விஜய் ஆண்டனி, சசிகுமார், சந்தானம் சூரி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நாட்டுப்புற பாடகர்கள் பரவை முனியம்மா, வேல்முருகன் ஆகியோருக்கும், இயக்குனர் சித்ரா லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, பவித்ரன், ஹரி ஆகியோருக்கும், நடிகைகள் குட்டி பத்மினி, நளினி, சாரதா, காஞ்சனாதேவி, டி.ராஜஸ்ரீ , பி.ஆர்.வரலட்சுமி, பிரியாமணி இவைதவிர கவிஞரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு ‘பாரதி விருது’ம், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

#prasanna #Santhanam #Vijay Sethupathi #Vijay Antony #Soori #Karthi #Priymani # Kalaimamani Awards