AD

தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமை!




   

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். 

அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இதை சன் டிவி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிபடுத்தியுள்ளது.

#ThalapathyVijay   #Thalapathy63  #Vijay