AD

Tiktok இற்கு தமிழகத்தில் தடை ???


தமிழ்நாட்டில் Tiktok செயலியை  தடைசெய்வது பற்றிய தகவல் வைரலாக பரவிவருகின்றது. அத்துடன் பல அமைச்சர்களும் இது தொடர்பாக கலந்துரையாடுகின்றார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது  Tiktok பயன்படுத்தும் அனைவருக்கும் அதிர்ச்சியான தகவலாகவே இருக்கின்றது.



இந் நிலையில் நடிகர் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்விடயம் பற்றிய ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “சில மக்கள் தவறாக ஒரு செயலியை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்காக நாம் அந்த செயலியை பயன்படுத்தாமல் விடுவது தவறு, அதற்கு பதிலாக அந்த செயலியை தவறாக பயன்படுத்துபவர்களை தண்டிப்பது தான் சரியான விஷயமாக இருக்கமுடியும். அதேபோல் தான் கேமராவை வைத்து நல்ல படங்களையும் எடுக்கிறார்கள், ஆபாச படங்களையும் எடுக்கிறார்கள். அதற்காக கேமராவை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லமுடியுமா?
அதனால் தவறாக பயன்படுத்துபவர்களை தான் நாம் தண்டிக்க வேண்டும். நல்ல திறமைகளை வளர்க்கும் டிக் டாக் போன்ற தளத்தை அல்ல. அதே நேரத்தில் நல்ல விஷயங்களும் பொழுதுபோக்கான விஷயங்களும்  இந்த     Tiktok தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன தான்" என்று ஒரு குட்டி பெண்ணின் funny video வையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். என்று கூறியதோடு ஒரு கியூட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.