AD

மக்கள் செல்வனுடன் ஜோடிபோடும் நடிகை சமந்தா!!

நடிகை சமந்தா திருமணத்துக்குப் பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டும் இவர், தற்போது அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக்’ படத்தில், ஹீரோயின் ரோலுக்கு சமந்தாவிடம் பேசிவருகிறார்கள். ‘96’ தெலுங்கு வெர்ஷனில் செம பிஸியாக இருக்கும் சமந்தா, யோசனையில் இருக்கிறாராம்.

நடிகை சமந்தா நடிப்பில்  வெளிவந்த படம்தான் 'யூ-டர்ன்' கதாநாயகிக்கு முக்கியம் வாய்ந்த கதைதான். படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்  நடிகை சமந்தா அதுவும் இந்த படம் ரசிகர்களுக்கு இடையில் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.