AD

மீண்டும் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார்- வைரலாகும் வீடியோ


நடிகர் சிவகுமார்  கடந்த வருடம்  ஒரு நிகழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஒரு ரசிகனின் மொபைலை தட்டிவிட்ட சம்பவம் மிகவும் வைரலாக பரவியது. இது பலர் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. அதன் பின் சிவகுமார்  சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கோரி அந்த நபருக்கு புதிய மொபைலையும் வாங்கி கொடுத்திருந்தார். 

இப்போது அதேபோல் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்ற அவர் செல்பி எடுக்க வந்தவரின் மொபைலை தட்டிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.