AD

திரையுலகில் தனது சாதனையை தானே அடித்து நொறுக்கிய தனுஷ் - வேறலெவல்



தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் மாரி 2. இதில் தனுசுக்கு  ஜோடியாக  சாய் பல்லவி நடித்திருந்தார்.

இந்த படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் இரசிகர்கள் மட்டில் பெரும் வரவேற்பை பெற்று வைரல் ஹிட் ஆகியுள்ளது. ரவுடி பேபி  youtubeஇல் வெளிவந்த நாளிலிருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.  பாடல் ரிலீஸ் முதல் வீடியோ ரிலீஸ் வரை எல்லாமே சாதனை தான்.யுவனின் துள்ளலான இசையில் உருவான இந்த பாடல் youtubeஇல்  வேற லெவல் ரீச்சை பெற்று வருகின்றது. தனுஷின் catchy ஆன வரிகளும் பாடலுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

இந்தப்  பாடலின் சாதனையை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அதேவேளை TikTok, Musically போன்ற செயலிகளிலும் பலர் இந்தப் பாடலிற்கு நடனமாடி பதிவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஆடியோ ரிலீஸின் போதே tiktok-ல் பலரால் பதிவு செய்யப்பட்ட பாடல் என்ற சாதனையையும் படைத்தது.அடுத்ததாக youtubeஇல் வீடியோ வந்தவுடன் பல சாதனைகளை படைத்தது.



பிரபுதேவாவின் அசத்தலான steps இற்கு  தனுஷ்,சாய் பல்லவி இருவரும் அசத்தலாக நடனமாட views எகிறியது. தமிழில் அதிவேகமாக 100 மில்லியன் ,150 மில்லியன் என சாதனைகளை அடுக்கிய இந்த பாடல் தற்போது மற்றுமொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதுவரை அனிருத் இசையில் தனுஷ்  எழுதிய கொலவெறி பாடல் தான்  youtube இல் அதிக முறை பார்க்கப்பட்ட தமிழ்  வீடியோவாக காணப்பட்டது.
175 மில்லியன் பார்வையாளர்களை  கொண்ட கொலவெறி   பாடலே இதுவரை முதல் இடத்தை பிடித்திருந்தது . தற்பொழுது இந்த பாடலை பின்னுக்கு தள்ளி Rowdy Baby பாடல் முதல் இடத்தை பெற்றிருந்தது. இதன் மூலம் 7 வருடமாக தொட முடியாமல் இருந்த தனது பாடலான கொலவெறியின் சாதனையை தானே முறியடித்திருக்கிறார் தனுஷ்.