AD

நடிகர் ஆர்யாவின் திருமணம் குறித்து அபர்ணதி!!


ஆர்யா காதலர் தினமான இன்று  தனது காதல் மற்றும் திருமணம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆசியால் நாங்கள் ஒரு புதிய வாழ்க்கையை விரைவில் தொடங்கவுள்ளோம். எங்களது திருமணம் அனைவரின் ஆசியோடு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ஆர்யா-சாயிஷா திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அபர்ணதியிடம்  கேட்டபொழுது ஆர்யாவும் சாயிஷாவும் திருமண செய்வது எனக்கு சந்தோசமே, அவர்கள் இருவருக்கும் என்னுடை வாழ்த்துக்கள்,  ஆர்யா என்னை திருமணத்திற்க்கு அழைத்தால் உறுதியாக சென்று அவர்கள் இருவரையும் வாழ்த்துவேன். மேலும் தான் ஆர்யாவுடன் சேந்து நடிக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக  நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.