AD

வைரலாகும் நடிகை நதியாவின் குடும்ப புகைப்படம்!!

நடிகை நதியா தமிழ் சினிமாவில் அதுவும் 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. நதியா ஹேர் ஸ்டைல், நதியா வளையல், நதியா தோடு இப்படி இவர் என்ன செய்தாலும் பின் பற்ற பல ரசிகைகள் கூட்டமே இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை நதியா இன்னும் இளமையாகத்தான் காட்சியளிக்கிறார். அவருடன் நடித்த நடிகைகள் பலர் தற்போதும் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர். ஆனால் நதியா சினிமாவிற்கு வந்து ஒரு சில படங்களே நடித்துவிட்டு, உடனே திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நதியா. சில வருடங்களிலேயே திருமணம் செய்த இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளார்கள். இப்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அட நதியாவிற்கு இவ்வளவு பெரிய பெண் பிள்ளைகளா என எல்லோரையும் ஆச்சிரிய பட வைத்துள்ளது.