AD

தலயை விட்டு இம் முறை தளபதியுடன் இணையும் சிவா


தல அஜித் நடித்த மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கிய சிவா, இம் முறை தளபதி விஜய்யுடன் கைகோர்க்கவிருப்பதாக தெரிகிறது.



சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களை  தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் விஜய், பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதேபோல் சிவாவிடமும் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவாவின்  அதிரடி ஆக்சன் கதையில் விஜய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.