AD

லேடி தாதாவாக மாறிய அபர்ணதி - அபர்ணதியின் நிஜ குணம்


வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.   ஓரு சிறு இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் ஜெயில். இது சென்னை கண்ணகி நகரில் வாழும் மக்களை பற்றிய படம். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார். இருவருமே கண்ணகி நகர் பகுதி மக்களாக நடிக்கின்றனர்.

அபர்ணதியின் கதாபாத்திரம் ஜெயில் படத்தில் அபர்ணதி கதாபாத்திரத்தின் தன்மை குறித்து தெரியவந்துள்ளது. இந்த படத்தில் அவர் லேடி தாதாவாக நடிக்கிறாராம். யாருக்கும் பயப்படாத, ஆண்களை புரட்டி எடுக்கும் தைரியமான பெண் கதாபாத்திரம் அவருக்கும்.


அபர்ணதியின் நிஜ குணமும் கிட்டத்தட்ட அதுபோல தான் இருக்கும். யாருக்கும் பயப்படாமல் தனது கருத்து தெளிவாக முன்வைக்கும் குணம் படைத்தவர் அவர். ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கூட தனது கருத்தை ஓப்பனாக பேசினார்.

நிஜத்திலேயே அதிரடி நபரான அபர்ணதி ஜெயில் படத்தில் என்ன மாதிரியான அடாவடிகளை செய்திருக்கப் போகிறார் என்று நினைக்கும் போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடுகிறது.