AD

நடிகை ரெஜினாவிற்கு இப்படி ஒரு சப்போர்ட்டா?

நடிகை ரெஜினா நடிகர் சிவகார்த்தியுடன் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து"சரவணன் இருக்க பயமேன்", ‘மிஸ்டர் சந்திரமவுலி’, ‘மாநகரம்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல  படங்களில் நடித்து இருக்கிறார் . இதைத் தவிர அவர் தெலுகிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

முதன் முறையாக ரெஜினா பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். பாலிவுட்டில் அவர் நடித்துள்ள படம் ‘ஏக் லட்கி கோ தேகா தோ அய்ஸா லகா’. இந்தப் படத்தில் அனில் கபூர், அவரது மகள் சோனம் கபூருடன் இணைந்து ரெஜினாவும் நடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.

படம் வெளியான பின் இவரின் நடிப்பை பார்த்து "லெஸ்பியன்" பிரிவினர் அவரை தத்தெடுத்ததாகவும், இனி அவரின் படங்களுக்கு ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.