AD

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணையும் யூடியூப் பிரபலம்!!

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த ஆண்டு 'சீமராஜா' என்னும் திரைபடத்தில் நடித்திருந்தார், மற்றும் இவர் தயாரித்த 'கனா'  திரைப்படமும்  நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு 'மிஸ்டர் லோக்கல்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் யூடியூபில் புகழ்பெற்ற"எருமைச்சாணி" ஹரிஜா முக்கிய கேரக்டரில் அதுவும் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.