AD

மெர்சலை பார்த்த மெர்சலான சாந்தனு - ட்விட்டரில் அட்லீ படம் குறித்து பதிவு.


தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் திரையுலகில் விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவராக நடிகர் சாந்தனு உள்ளார். இவர் தன்னுடைய ட்விட்டரில், மெர்சல் படத்தில் வரும் தளபதி விஜய் என்ட்ரியை பதிவு செய்துள்ளார். அப்படத்தில் விஜய் வெற்றிமாறன் எனும் பாத்திரத்தில் வரும் காட்சியை வீடியோவாக பதிவாக பதிவிட்டு ரசித்து வருகின்றார்.

தற்போது அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அட்லீ. இவர் அடுத்த படத்தில் தளபதியை
எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இதனால் நிச்சயம் நடிகர் சாந்தனுவை, தளபதி படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களோடு ரசிகராய் எதிர்பார்க்கலாம். என்றைக்காவது தளபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே
சாந்தனு சென்றுவிடுவார் போல் உள்ளது.