AD

உலகநாயகனின் மகள் எடுத்த தீடீர் முடிவு!!

நடிகை ஸ்ருதி ஹாசனை முதலில் தமிழில் நடித்தார், அதன் பிறகு மளமளவென  இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ருதி தற்போது பிரேக் எடுத்துக்கொண்டு ஆங்கில பாப் பாடல்களை வெளிநாட்டு மேடைகளில் பாடி வருகிறார். 

கடந்த 2015ம் ஆண்டு இந்தியில் "தனுஷ்" நடித்த சமிதாப் படம் மூலம் அறிமுகமானார் அக்‌ஷரா. நடிக்க வந்து 4 வருடங்கள் ஆகியும் பெரிய அளவில் படங்கள் கைகூடி வரவில்லை. தமிழில் அஜீத் நடித்த "விவேகம்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  தற்போது விக்ரமுடன் "கடாரம் கொண்டான்" படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 4 வருடத்தில் 4 படங்களில் மட்டுமே அவர் நடித்திருந்தார். நடிகைக்கான மேக்அப் விஷயத்தில் கவனம் செலுத்தாமலிருந்ததும், அவரது திறமைக்கேற்ற கதாபாத்திரம் அமையாததுமே,  அக்‌ஷராவுக்கு படங்கள் அதிகம் வராததற்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.


அக்கா ஸ்ருதிஹாசன் போல் கவர்ச்சி காட்சிகளில் நடிக்காமல் ஒதுங்கியிருந்ததும் மற்றொரு மைனஸ் ஆக இருந்தது. அதையெல்லாம் கூட்டிகழித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கும் அக்‌ஷரா. மேக்அப், கிளாமர் அட்ராக்‌ஷனில் கவனத்தை திருப்பியிருக்கிறார். சமீபத்தில் பட விழா ஒன்றிற்கு வந்த அக்‌ஷரா, பார்பி கேர்ள் பொம்மைபோல் அசத்தலான மேக்அப்புடன் வந்திருந்தார். அவரது படுகவர்ச்சியான காஸ்டியூம் பல்வேறு கமென்ட்டுகளுக்கு வழிவகுத்திருக்கிறது.