AD

போதும் சார்னு சொல்ற அளவு செல்பிக்கு போஸ் கொடுத்த சிவகுமார்- வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த  நடிகர்களில் சிவக்குமாரும் ஒருவராவார். ஆனால் சமீபகாலமாக இவரை சுற்றி செல்போனை தட்டி விட்ட சர்ச்சையே அதிகம் காணப்பட்டது.

ஒரு இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன் செல்பி எடுக்க முயன்றபோது நடிகர் சிவகுமார் அவருடைய செல்போனை தட்டிவிட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனையடுத்து
இந்த நிகழ்வுக்காக மன்னிப்பு கேட்ட சிவகுமார், அந்த இளைஞருக்கு புது செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் சிவகுமார் கலந்து கொள்ள சென்றபோதும் செல்பி வீடியோ எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இதுவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி திரிந்தது. இதனால் செல்பியை வெறுக்கும் சிவக்குமார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுமாக ஓடி கொண்டிருந்தது. தற்போது இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக ரசிகர் ஒருவருடன் செல்பியை தாண்டி வீடியோவே எடுத்து கொண்டுள்ளார் சிவக்குமார்.