AD

ஸ்ரீதேவியின் நினைவாக கணவர் போனிகபூர் செய்யும் உதவி!!

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை சென்று வெற்றி கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மறைந்தார். தற்போது அவரின் புடவை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஸ்ரீதேவியின்  சேலையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை "இந்தியா பவுண்டேஷன்" எனும் தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க இருக்கிறார். ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் விதமாக இந்த தொகை இருக்கும் என தெரிவித்துள்ளார். ஏலம் விடும் ஒரு இணையதளத்தின் மூலமாக அவரின் சேலையை ஏலம் விடப்படுகிறது.