AD

நான் என்ன நிர்வாணமாக நடித்துள்ளேன் கண்ணீர் விடும் ஓவியா!!

நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்எல் movie நாளை மறுநாள் வெளிவரும்நிலையில் ஓவியா டென்சன்யாகி ஒரு நிருபருக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் 90 எம்எல் படம் ஆண் ஆதிக்கத்துக்கு எதிரான படம், பெண் தனி சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்று வலியுருத்தும் படம். ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்களும் செய்ய உரிமை உண்டு என்று உணர்த்ததும் படம்.
ஆண்கள் மது குடிக்கும்போதும் புகை பிடிக்கும் போதும் எதிர்க்காதவர்கள் அதை பெண்கள் செய்யும் பொழுது ஏன் எதிர்க்க வேண்டும். ஆணுக்கு ஒருநீதி பெண்ணுக்கு ஒரு நீதியா? சில மாதங்களுக்கு முன்பு வரை நான் புகைப்பிடித்தேன், அது என் உரிமை தற்பொழுது என் உடல் நலம் கருதி நிறுத்தி உள்ளேன். அது என் உரிமை இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

90 எம்எல் ட்ரெய்லர் பார்த்து விட்டு ஏன் இவ்வளவு விமர்சனம் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்த படத்தில் நிர்வாணமாகவா  நடித்துள்ளேன். கற்பழிப்பு காட்சிகள் கூட இல்லை. முத்தம் குடுக்கும்  காட்சிகளில் நடித்திருப்பது பெரிய தப்பா? நான் கவர்ச்சியாக நடித்திருப்பது உண்மைதான், ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை ஆபாசத்திருக்கும் கவர்ச்சிக்கும் என்ன வேறுபாடு என்பது பார்ப்பவர்களின் பார்வையில் இருக்கிறது. என் ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அதை கொடுப்பது எனது கடமை, அதை நான் செய்கிறேன்.
நான் நடித்த கேரடருக்கு என்ன தேவையோ அதற்க்கு ஏற்ற மாதிரிதான் நடித்திருக்கிறேன். 90 எம்எல் படத்தில் எனக்கு மாடர்ன் கேர்ள் வேடம் அதனால் நான் குறைவான ஆடை அணிந்து நடித்திருக்கிறேன். காதலை பற்றி என்னிடம் திரும்ப திரும்ப கேட்கிறார்கள், எனக்கு காதலில் நம்பிக்கை உண்டு ஆனால் கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை. என்று பொரிந்து தள்ளியுள்ளார்.