AD

'நீங்கள் நடித்தால் மட்டுமே போதும், அதை ஹிட் ஆக்குவது எங்களது கடமை' - உணர்ச்சிவசப்பட்ட டிடி


அண்மையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி(டிடி) விஜய்யுடன் முதன்முதலாக புகைப்படம் எடுத்த அனுபவத்தைக் கூறியுள்ளார்.

அதில் துப்பாக்கி படப்பிடிப்பிலேயே அவருடன் முதன்முதலாக புகைப்படம் எடுத்தேன். அவரின் கேரவனுக்குள் போனதும் அன்பாக விஜய் என்னை அழைத்தார், நான் உடனே உணர்ச்சிவசப்பட்டு நீங்கள் படம் நடித்தால் மட்டுமே போதும், அதை ஹிட் ஆக்குவது எங்களது கடமை என்றேன்.
அதை எதற்கு அவர் முன் கூறினேன் என்று தெரியவில்லை, ஆனால் விஜய் அவர்கள் அதற்கும் அழகாக சிரிப்பை வெளிப்படுத்தினார் என்றார்.

தளபதி விஜயுடன் புகைப்படம் எடுப்பது என்பது ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா பிரபலங்களுக்கும் கனவாகவே உள்ளது.