AD

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு!!






நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை நயன்தாராவும், நடித்து வரும் படம் ஒன்றை இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கியுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே. 'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் இணைந்துள்ளது இந்த ஜோடி.

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மிஸ்டர் லோக்கல்'  'என்றும்  'ஜித்து ஜில்லாடி' என்றும், வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியில் வந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவிருப்பதாக இந்த படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.