AD

எனை நோக்கி பாயும் தோட்டா! ரிலீஸ் பற்றிய விபரம் இதோ!


தனுஷின் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் உருவாகியுள்ளது. தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். மற்றும் சசிகுமார், சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் பல முறை பல்வேறு காரணங்களினால் தள்ளிப்போனது.  இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். தற்போது இந்தப் படம் பற்றிய புது அப்டேட்ஸ் கிடைத்துள்ளன. இப் படம் சென்சார் வேலைகளில் உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வரும் என்றும் படத்தயாரிப்பாளர் மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.