AD

தனது கடைசி நிகழ்ச்சி அஜித்துடன்தான் இருக்க வேண்டும் - திவ்யதர்ஷினி!!

சின்னத்திரை தொகுப்பாளினியாக மக்களின் மனதை கவர்ந்தவர்
திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் டிவி தொகுப்பாளினியாக 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.  தனது கல கல கேள்விகளால் ரசிகர்களின் மனதில்  நிலைத்து நிற்பவர். இன்று பிறந்த நாள் காணும் இவருக்கு பல்வேறு திரையுலங்க பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் டிடி தனியார் தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்திருந்தார்.  உங்களுக்கு நகைச்சுவையான இன்டெர்வியூ எது என்று கேட்டதற்கு அனிரூத்தும், எல்.விஜய்யும் வந்த ஷோ சரியான நகைச்சுவையாக இருந்தது என்றார். உங்களுக்கு யாரை பிடிக்கும் என்றதுக்கு தலைவர் என்று பதில் சொன்னார். உங்களுக்கு நிறைய கமெண்ட்ஸ் வந்து இருக்கும் அதில் உங்களுக்கு பிடித்த  கமெண்ட்ஸ் என்ன என்று கேட்ட பொழுது நடிகர் விஜய்சேதுபதி சொன்ன கமெண்ட்ஸ் தனக்கு பிடித்ததது என்றார். அவருக்கு பிடித்த ஜோடி சூரிய- ஜோதிகா  என்றார்.

அப்போது நீங்கள் செய்யும் கடைசி நிகழ்ச்சி இது என்றால் யாரை பேட்டி காண விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு டிடி சற்றும் யோசிக்காமல் அஜித் என்றார். சின்னத்திரை மட்டுமல்லாமல் நளதமயந்தி, விசில், பவர்பாண்டி உள்ளிட்ட படங்களிலும் டிடி நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்வம் தாளமயம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.