AD

தன் அழகை அதிகரித்த முடியையே நறுக்கி அதிர்ச்சி அளித்த பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே


பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரேமஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனுபமா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அனுபமா தனது நீண்ட கூந்தலை  தற்பொழுது குறைத்து வெட்டியுள்ளார். தலைமுடியை வெட்டிய பிறகு எடுத்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  தலைமுடியை நறுக்குவதற்கு முன்பாக அனுபமா அதை ஸ்ட்ரெய்டனிங் செய்திருந்தார். உங்களுக்கு சுருட்டை முடி தான் அழகு என்று ரசிகர்கள் கூறிய நிலையில் இப்படி செய்துவிட்டார்.

 அனுபமா பரேமேஸ்வரன் பெயரை சொன்னதுமே அவரின் நீண்ட அழகான கூந்தல் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்நிலையில் அப்படி அழகாக இருந்த கூந்தலை இப்படியாக்கிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.