AD

குட்டி சென்றாயனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்!


பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி பொறுத்தவரை சில பிரபலங்களை ஒரே வீட்டில் தங்க வைத்துவிடுவார்கள். அங்கு அவர்கள் பேசுவது, சண்டை, காதல், துரோகம் மற்றும் அழுகை என அனைத்து வகையான எமோஷன்களையும் டிவியில் ஒளிபரப்புவார்கள்.

அதன் மூலம் மக்களுக்கு இந்த பிரபலங்களின் உண்மை குணம் தெரியவரும், அதற்குயேற்றவாறு மக்கள் இந்த பிரபலங்களுக்கு வரவேற்பு கொடுப்பார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 2 வில் நடிகர் சென்றாயன் கலந்துகொண்டார். இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். ஆனால் பைனல்ஸ்க்கு முன்பு வெளியாகிவிட்டார்.

இவருக்கு திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லை என்று நிகழ்ச்சியில் கூட வருத்தப்பட்டார். ஆனால் பிக் பாஸ் முடிவதற்குள் இவரின் மனைவி கர்ப்பமானார். இந்த நிலையில், நேற்று இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயத்திற்காக பல பிரபலங்களும் இவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.