AD

பேட்டை, விஸ்வாசம் - யாரு மாஸ்???



அண்மையில் ரஜனி மற்றும் அஜித் நடித்து வெளிவந்த முக்கிய இரு படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம்.  தற்பொழுது வசூல் ரீதியாக இரு படங்களும் நல்ல சாதனை செய்து வருகின்றன.வெளிநாட்டில் விஸ்வாசம் படத்தை  விட பேட்ட படத்திற்கு அதிக வசூல் கிடைத்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பமே பெரிய நடிகர்களின் படங்களாக இந்த 2 படங்களும் களமிறங்கியுள்ளது. விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

வசூலில் சென்னையில் பேட்ட படம் தான் விஸ்வாசத்தை விட முன்னிலையில் இருந்து வந்தது. இப்போது முதன்முறையாக ஒரு விஷயத்தை ரஜினியின் பேட்ட படத்தை தோற்கடித்துள்ளது அஜித்தின் விஸ்வாசம்.

அதாவது இந்த 5வது வாரத்தில் விஸ்வாசம் மொத்தம் 79 காட்சிகள் ஓட உள்ளதாம், ஆனால் ரஜினியின் பேட்ட 54 காட்சிகள் தான் ஒளிபரப்ப இருக்கிறதாம்.