AD

தன்மானம் முக்கியம் - நடிகர் ரஜினியை விமர்சித்த நடிகை ஸ்ரீப்ரியா!!

நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் கமலும் நாற்பதாண்டு கால நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும் கடந்த சில மாதங்களாக நடிகர் ரஜினி மீது கமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனங்களால்  தாக்கி கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே விஷயமே! 
சமீபத்தில் கூட 'அரசியலில்  இறங்கிய பின் "பின்வாங்கினால்" மரியாதை இருக்காது என்றும், பின்னர் எதற்காக தொடைதட்டி இறங்க வேண்டும் என்றும் சாப்பாடு பரிமாறிய பின்னர் சாப்பிட முடியாது என்று கூறுவது நல்லதா? என்றும் ரஜினியின் அறிக்கை ஒன்று குறித்து மறைமுகமாக கமல் தாக்கினார்.

மேலும் இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் நடிகையுமான ஸ்ரீப்ரியா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசியபோது,"'தண்ணீர் பிரச்சனையை" தீர்ப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று ஒருவர் கூறியிருக்கிறார் . தமிழ் நாட்டில் தண்ணீரை விட தன்மானம் முக்கியம். தன்மானத்துடன் இருக்கும் தலைவருக்கு வாக்களியுங்கள், உண்மையை பேசுபவர்களுக்கு வாக்களியுங்கள், ஊழலை ஒழிப்பேன் என்று பேசுபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியிருந்தால் ஏற்று கொண்டிருக்கலாம் என்று ரஜினியை ஸ்ரீப்ரியா மறைமுகமாக தாக்கினார்.