AD

‘கண்ணடித்து கண்ணடித்து" களைத்துப்போன நடிகை!!

ஒரு "அடார் லவ்" பட டீஸரில் காதலனை கண்ணடித்து ஒரு வசீகர  சிரிப்பை  சிரித்து காதல் வலை வீசி நடித்த பிரியாவாரியர் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சையில் சிக்கிய இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு  தமிழில் வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறார்.  இது தொடர்பான பட விழா ஒன்றில் பிரியாவாரியர் கலந்துகொண்டார். சிறப்பு பார்வையாளராக  "அல்லு அர்ஜூன்" பங்கேற்றார். நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தபோது நடிகை பிரியாவாரியரிடம்  கண்ணடித்து காதல் செய்து காட்டுங்கள் என்றார்கள்.


அதற்கு அவர், ‘கண்ணடித்து கண்ணடித்து" களைத்துப்போய் விட்டேன் வேண்டுமானால் விரல் துப்பாக்கியில் காதல் சொல்கிறேன்’ என்று இரண்டு கைகளையும் ஒன்றாக வைத்து அதில் இரண்டு விரல்களை துப்பாக்கி முனைபோல் நீட்டி அதன்மீது முத்தமிட்டு அல்லு அர்ஜுனை நோக்கி சுட்டார். அதைக்கண்டு அல்லு அர்ஜுன் காதல் மயக்கம் அடைந்தவர்போல் நடித்தார். இதேகாட்சி இப்படத்திலும்  இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.