AD

சூர்யாவை பின்தொடரும் ஜோதிகா!!

இயக்குனர் ராதா மோகன் இயக்கிய 'காற்றின் மொழி' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கிவருகிறார்.  மேலும் இதில் நடிகைகள் பூர்ணிமா பாக்கியராஜ், ரேவதி மற்றும் ஹரீஸ் பேரடி, கவிதா பாரதி, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக ஜோதிகா சிலம்பம் சண்டை செய்யும் காட்சிகள் இடம் பெற உள்ளதாம்.

அதற்காக  ஜோதிகா, பிரபலசண்டை பயிற்சியாளர் பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றுவருகிறாராம். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு பயிற்சி அளித்ததோடு மட்டும் அல்லாது, நடிகர் சூர்யாவும் , நடிகர் கார்த்தியும்  ஆரம்பகாலங்களில் பாண்டியன் மாஸ்டரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.